தன் தோல் பளபளப்பாக இருக்க என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார் தமன்னா.

தமன்னா

தமன்னாவின் பெயரை சொன்னதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரின் பளபளப்பான தோல் தான். ரசிகர்கள் அவரை செல்லமாக மில்க் பியூட்டி என்று அழைக்கிறார்கள். தமன்னாவின் தோல் மட்டும் நாளுக்கு நாள் கூடுதலாக பளபளப்பாகிக் கொண்டிருக்கிறதே. அதற்கு அவர் என்ன தான் செய்கிறாரோ என்பதே ரசிகைகள் மட்டும் அல்ல ரசிகர்களின் வியப்பும் கூட.

ரகசியம்

தன் தோல் பளபளப்பாக இருக்கவும், தான் துடிப்பாக இருக்கவும் விரதம் இருப்பது தான் காரணம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. அவர் கூறியதாவது, விரதம் இருப்பது குறித்து பல விமர்சனங்கள் உள்ளது. அதனால் குழப்பமும் ஏற்படுகிறது. நான் பல டயட்டுகளை பின்பற்றினேன். ஆனால் அவை பலனளிக்கவில்லை என்றார்.

உணவு

இரவு நேரம் சாப்பிடாவிட்டால் எப்படி சமாளிப்பது என்பது எனக்கு புரியவே இல்லை. அதிலும் நான் இரவு நேரத்தில் ஏதாவது கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடும் ஆள். நான் மாலை 5.30 மணிக்கு சாப்பிடுவேன். அதன் பிறகு மறுநாள் காலை 6 மணிக்கு தான் சாப்பிடுவேன். அது எனக்கு நன்றாக பலனளிக்கிறது என்று தமன்னா தெரிவித்துள்ளார்.

தோல்

நான் அன்றைய நாளின் கடைசி உணவுக்கும் மறுநாளின் முதல் உணவுக்கும் இடையே 12 மணி நேர இடைவெளி விடுவதால் என் தோலில் மாற்றம் தெரிகிறது, தூக்கமும் நன்றாக இருக்கிறது. முன்பை விட தற்போது தெம்பாக இருக்கிறேன். 12 மணிநேர இடைவெளி போதுமானது. ஆனால் உங்களால் முடியும் என்றால் அதை நீட்டிக்கலாம் என்று தமன்னா கூறியுள்ளார்.