ஹைலைட்ஸ்:

  • ப்ரதிக் சஹஜ்பல் மீது ஆகாசா சிங் அம்மா கோபம்
  • ஆகாசா சிங்குடன் நெருக்கமாக இருக்கும் ப்ரதிக் செஹஜ்பல்

சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 15 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நடிகர் ப்ரதிக் செஹஜ்பல் எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு மல்லுக்கு பாய்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாடகி ஆகாசா சிங் மீது ப்ரதிக்கிற்கு ஃபீலிங்ஸ் ஏற்பட்டிருக்கிறது. ஆகாசாவும் கடந்த இரண்டு நாட்களாக ப்ரதிக் மீதான ஃபீல்ங்ஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் பயங்கர சண்டை: ஜன்னல், பொருட்களை அடித்து நொறுக்கிய போட்டியாளர்கள்ப்ரதிக், ஆகாசா தான் இந்த சீசனின் காதல் ஜோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆகாசாவின் அம்மா அம்ரீதா சிங் கூறியிருப்பதாவது,

ஆகாசா எங்களை மிஸ் பண்ணுகிறார். நாங்கள் எப்பொழுதும் ஒன்றாக இருப்போம், அவர் ஜோக்கடித்துக் கொண்டே இருப்பார். தன் குடும்பத்தாருடன் பேசுவது போன்று தான் பிக் பாஸ் வீட்டிலும் அனைவருடனும் பேசுகிறார் ஆகாசா.

ப்ரதிக் என் மகள் பின்னாலேயே சுத்துகிறார். ப்ரதிக்கிடம் தன் சகோதரர் ஆசா சிங்கை பார்க்கிறார் போன்று ஆகாசா. ஆனால் ப்ரதிக் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறார்.

ஆகாசாவுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்கிறார் ப்ரதிக். ஆகாசாவுக்கு ப்ரதிக் மீது எந்த ஃப்லீங்கும் இல்லை. ப்ரதிக் எப்பொழுது பார்த்தாலும் பெண்களுடன் இருக்கிறார் என்றார்.