தனுஷின் புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 45.

செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் மணி கதாபாத்திரத்தில் நடித்த நிதிஷ் வீரா வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமானார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த வீரா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 45. இது குறித்து அறிந்த செல்வராகவன், என் மணியின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Twitter-selvaraghavan

விஷ்ணு விஷால்

#RIPNitishVeera

இதை எழுத வேதனையாக இருக்கிறது. அவருடன் சேர்ந்து வெண்ணிலா கபடிகுழு மற்றும் மாவீரன்கிட்டு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த கொரோனா இரண்டாம் அலை பல உயிர்களை எடுத்துச் செல்கிறது. பத்திரமாக இருங்கள் என நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Twitter-VISHNU VISHAL – V V

சாக்ஷி அகர்வால்

#RIPNitishVeera

காலா படத்தில் உங்களுடன் சேர்ந்து நடித்தது அருமையான அனுபவம். கடினமான உழைப்பாளி. அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை மிஸ் பண்ணுவோம் என சாக்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.

Twitter-Sakshi Agarwal

க்ரிஷ்

நிதிஷ் வீராவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று நடிகரும், பாடகருமான க்ரிஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Twitter-KRISHH