தன் முன்னாள் மனைவி கவிதாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.

ராஜ் குந்த்ரா

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன்னையும், கணவர் ராஜ் குந்த்ராவையும் பிரித்துவிட்டதாக கவிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. கவிதாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் விவாகரத்தான பிறகே அவரை சந்தித்ததாக ஷில்பா தெரிவித்துள்ளார். ஷில்பாவுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கவிதாவின் குற்றச்சாட்டு குறித்து ராஜ் குந்த்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.

விளக்கம்

கவிதா பற்றி ராஜ் கூறியிருப்பதாவது, என் முன்னாள் மனைவி கவிதாவுக்கும், என் சகோதரியின் கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர்களை என் அம்மா பலமுறை கையும், களவுமாக பிடித்திருக்கிறார். கவிதாவின் பழைய வீடியோ வைரலாவதை பார்த்த நான் அதை ஷில்பாவுக்கு அனுப்பினேன். அவரோ இது குறித்து பேச வேண்டாம் ராஜ் என்றார். ஆனால் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.

மகள்

விவாகரத்தான பிறகு நான் கவிதாவிடம் பேசியது இல்லை, இனி பேசவும் மாட்டேன். என் மகளை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. சரியான நேரத்தில் என் மகள் என்னிடம் வருவார் என்பது தெரியும். மகள் பிறந்த முதல் 40 நாட்கள் தான் அவரை பார்த்தேன். ஷில்பாவை திருமணம் செய்த பிறகு நான் லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டேன். கவிதா என்னை எங்கள் மகள் அருகில் வர விரும்பவில்லை. நீதிமன்றமும் அவருக்கு சாதமாக இருந்தது என்கிறார் ராஜ் குந்த்ரா.

மன்னிக்கவே மாட்டேன்

கவிதாவுக்கும், எனக்கும் இடையேயான உறவு மோசமாக இருந்தது. அதில் இருந்து வெளியே வந்து நான் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டேன். நான் தற்போது சந்தோஷமாக இருக்கிறேன். கவிதா எனக்கு துரோகம் செய்தார், அது பரவாயில்லை. ஆனால் என் சகோதரியின் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஒரே நேரத்தில் இரண்டு குடும்பங்களை நாசம் செய்துவிட்டார். அதை மட்டும் நான் மன்னிக்கவே மாட்டேன் என்று ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.