ராஜ் மற்றும் டிகே இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் அண்மையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்திற்காக இவர்கள் இயக்கும் புதிய வெப் சீரிஸில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

கொரோனா அலை தொடங்கியதில் இருந்து ஓடிடி தளங்களுக்கும், வெப் தொடர்களுக்கும் மவுசு அதிகமாகிவிட்டது. பாலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய மொழியில் உருவாகும் வெப் தொடர்களில் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்களும் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழிலும் முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் ஓடிடி தளங்களுக்காக படம் இயக்க, நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில் ‘தி பேமிலி மேன்’ வெப் தொடர் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே அமேசான் ப்ரைம் தளத்திற்காக இயக்கவுள்ள புதிய வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

இயக்குனர் வசந்தின் படத்தை வெளியிடும் பிரபல ஓடிடி நிறுவனம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இந்த தொடர் சம்பந்தமான சந்திப்பில் விஜய் சேதுபதியும், சந்தீப் கிஷனும் கட்டித்தழுவி முத்தமிட்டுக் கொண்டனர். இந்தப் புகைப்படங்களை சந்தீப் கிஷன் தன்னுடைய இணையத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராஜ் & டிகே இயக்குனர்களின் ‘தி பேமிலி மேன்’ முதல் சீசனில் சந்தீப் கிஷன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.