ஹைலைட்ஸ்:

  • பாலா படத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின், அருள்நிதி?
  • முதல் முறையாக சேர்ந்து நடிக்கும் உதயநிதி, அருள்நிதி
  • கை நிறைய படங்கள் வைத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின்

வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பதற்கு பெயர்போனவர் இயக்குநர் பாலா. அவர் படத்தில் நடித்தாலே தங்களின் நடிப்புத் திறன் மேம்பட்டு, கெரியர் பிக்கப்பாகிவிடும் என்று நடிகர்கள், நடிகைகள் நம்புகிறார்கள்.

சொந்த கதையை படமாக்கி வந்த பாலாவை தன் மகன் த்ருவை வைத்து அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யுமாறு அன்பு கோரிக்கை விடுத்தார் விக்ரம். தனக்கு மறுவாழ்வு கொடுத்த பாலா தான் தன் மகனை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்து அப்படி கேட்டார்.

பாலாவும் சரி என்று சொல்லி த்ருவை வைத்து வர்மா படத்தை இயக்கினார். ஆனால் முழுப்படத்தையும் பார்த்த தயாரிப்பு தரப்பு இது சரியில்லை என்று கூறி வேறு ஒரு இயக்குநரை வைத்து மீண்டும் படத்தை எடுத்து வெளியிட்டது.

வர்மா பிரச்சனைக்கு பிறகு பாலா புதுப்படம் எதையும் இயக்கவில்லை. இந்நிலையில் தான் அவர் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உதயநிதியும், பாலாவும் சேர்ந்து படம் பண்ணப் போகிறார்கள் என்று கடந்த 2018ம் ஆண்டே பேச்சு கிளம்பியது. ஆனால் அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் உதயநிதிக்காக அப்பொழுது எழுதிய கதையை மாற்றி அதில் அவரின் தம்பி அருள்நிதிதையையும் நடிக்க வைக்கவிருக்கிறாராம் பாலா. உதயநிதியும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்கவிருப்பது இது தான் முதல் முறை ஆகும்.

பாலா படத்தில் நடித்தால் அந்த காட்சி கச்சிதமாக வரும்வரை பெண்டை நிமித்திவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தான் அவர் இயக்கத்தில் உதயநிதியும், அருள்நிதியும் நடிக்கவிருக்கிறார்கள். தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.

உதயநிதியும், அருள்நிதியும் சேர்ந்து நடிக்கும் படத்தை இயக்குவதுடன் தன் பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரிக்கவும் செய்கிறாராம் பாலா. உதயநிதியை எப்படி வித்தியாசமாக காட்டப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

என்ன நடந்துச்சு, உண்மையை சொல்லுங்க சிம்பு: கேள்வி மேல் கேள்வி கேட்கும் ரசிகர்கள்