ஹைலைட்ஸ்:

  • அபிஷேக் ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
  • கமல் ஹாசனை மரியாதை இல்லாமல் பேசிய அபிஷேக்

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் புதுமுகங்களாக இருக்கிறார்கள் என்று பார்வையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜா அந்த நிகழ்ச்சியையும், அதை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனையும் மேடை ஒன்றில் விளாசினார். அவர் விளாசி பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது ட்விட்டரில் வெளியிட்டு இது என்னவென்று கேளுங்க ஆண்டவரே என்கிறார்கள் ரசிகர்கள்.

கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலை இருக்கே: கமலை திட்டிய பிக் பாஸ் 5 போட்டியாளர்சமூக வலைதளங்களில் நேற்று மாலையில் இருந்து அந்த வீடியோ பற்றி தான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அபிஷேக் ராஜாவை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டவரே அன்று பேசியது நான் இல்லை அது வேறு யாரோ, உங்க கையால என்ன அடிங்க என்று அபிஷேக் கமலிடம் கூறுவது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
ட்விட்டரில் நடக்கும் கலாட்டா அபிஷேக்கிற்கு தெரிய வந்தால் என்ன செய்வாரோ?
எவ்ளோ மானங்கெட்டு திரிய வேண்டியிருக்கு என்று மரணமாக கலாய்த்திருக்கிறார்கள்.
அபிஷேக் விவகாரம் ஒரு பக்கம் இருக்க, நிகழ்ச்சியை துவங்கிய இரண்டாவது நாளே அழுகாச்சியா என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.