Memes
oi-Jaya Chitra
சென்னை: மாதத்தின் முதல் வாரம் என்பதால், சம்பளம் பற்றியும், இஎம்ஐ பற்றியும் அதிக மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது.
“போனு இஎம்ஐ, வீடு இஎம்ஐ, காரு இஎம்ஐ.. ஏன் ஜட்டி கூட இஎம்ஐ..” என இங்கு பலரது வாழ்க்கை “என்னா மை-ல.. இஎம் ஐ-ல..” என்ற பாடலாகத்தான் உள்ளது. இதனாலேயே சம்பளம் வாங்கிய சில நாட்களிலேயே திரும்பவும் வங்கிக் கையிருப்பு பூஜ்யமாகி விடுகிறது. தேவைக்கு வாங்கியப் பொருட்களுக்குத்தான் இஎம்ஐ என்றாலும், மாதம் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வங்கிக் கணக்கில் சில நாட்களுக்குக்கூட வைத்திருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கு உண்டு.

அதனாலேயே மாதத்தின் முதல் வாரம் ஆகி விட்டால் இஎம்ஐ மீம்ஸ்கள் தான் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இந்தப் பட்டியலில் இன்னமும் சம்பளம் வாங்காதவர்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

இப்படியாக சம்பளத்தை எதிர்பார்ப்போரும், இஎம்ஐ நினைத்து கவலைப்படுவோரும் என பணத்தை களமாக வைத்து அதிகமான ஜாலி மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவற்றில் சில உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on wage.
Tale first revealed: Friday, Would possibly 6, 2022, 18:57 [IST]