ஹைலைட்ஸ்:

  • நலமாக இருக்கிறேன்- நடிகை சாரதா
  • சாரதா இறந்துவிட்டதாக தீயாக பரவிய வதந்தி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்தவர் சாரதா. ஹீரோயினாக ஒரு ரவுண்டு வந்தவர் பின்னர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சாரதா தன் சகோதரரின் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சாரதா இறந்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. சாரதா மரணம் என்று வாட்ஸ்ஆப்பிலும் பலரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்து சாரதா கோபமாக விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

நான் நலமாக இருக்கிறேன். நான் இறந்துவிட்டதாக சிலர் கற்பனையாக தகவல் வெளியிட அது எனக்கு நெருக்கமான பலரை வேதனை அடையச் செய்துவிட்டது. எனக்கு பலரும் தொடர்ந்து போன் செய்து கொண்டிருக்கிறார்கள். இது ரொம்ப தவறு.

வேலையில்லாதவர்கள் ஏதாவது வேலையை தேடவும். அடுத்தவர்களுக்கு இப்படி தொல்லை கொடுப்பது சரியல்ல. தயவு செய்து தற்போதாவது திருந்துங்கள்.

ஒருவர் அதிலும் வயதான காலத்தில் தான் உயிருடன் இருப்பது குறித்து விளக்கம் அளிப்பது கொடூரமானது. அதுவும் இது போன்ற விஷயம் அடிக்கடி நடக்கிறது. ஒருவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்த பிறகே அந்த தகவலை மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்றார்.

76 வயதாகும் சாரதா மூன்று முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் 11 ஆபரேஷன்: நடிகை சரண்யா சசி மரணம், பிரபலங்கள் இரங்கல்