ஹைலைட்ஸ்:

  • ஸ்ருதியின் வயிற்றில் வரைந்த காதலர் சாந்தனு
  • ஸ்ருதியை விமர்சிக்கும் சமூக வலைதளவாசிகள்

நடிகை ஸ்ருதி ஹாசனும், டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். சாந்தனு தற்போது ஸ்ருதியின் மும்பை வீட்டில் தான் தங்கியிருக்கிறார். அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள்.

இந்நிலையில் ஸ்ருதியின் வயிற்றில் தக் லைஃப் என்று எழுதியிருக்கிறார் சாந்தனு. அவர் தன் வயிற்றில் எழுதியதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டிருக்கிறார் ஸ்ருதி. அந்த வீடியோக்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, தக் லைஃப்னு எழுத உங்கள் வயிறது தான் கிடைத்ததா?. அப்படியே நீங்கள் சாந்தனுவை உங்கள் வயிற்றில் எழுத அனுமதித்தாலும் அதை ஏன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்?

உங்களின் அப்பாவை பற்றி நினைத்துப் பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற இடத்தில் சாந்தனுவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஸ்ருதி. அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஸ்ருதியை விளாசினார்கள்.

இதற்கிடையே ஸ்ருதி நடிக்க வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளாக தன்னை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டார் ஸ்ருதி.

இசை மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி ஹாசன் ஒரு சுபயோக சுபதினத்தில் நடிகையாகிவிட்டார். அவர் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்து வருகிறார்.

கே.ஜி.எஃப். படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்குவதால் சலார் படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் பல காலமாக தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி முதல் முறையாக பிரபாஸுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

காத்திருந்தது வீண் போகல: ப்ரியா பவானி சங்கருக்கு அடித்தது ஜாக்பாட்