ஏ.ஆர். ரஹ்மான் யார் என்று தெரியாது என கூறிய நடிகர் பாலகிருஷ்ணாவை இசை ரசிகர்கள் ட்விட்டரில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

பாலகிருஷ்ணா

டோலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா தெலுங்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஏ.ஆர். ரஹ்மான் யார் என்றே எனக்க தெரியாது. அவர் ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆனாலும் அவர் யார் என்று தெரியாது. பத்து ஆண்டுக்கு ஒரு முறை ஹிட் கொடுக்கிறார் என்றார். பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான நிப்பு ரவ்வா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ரத்னா

பாரத ரத்னா விருது என்பது என் தந்தை என்.டி.ஆரின் கால்விரல் நகத்திற்கு சமம். தெலுங்கு திரையுலகிற்காக என் குடும்பத்தின் அர்ப்பணிப்பை எந்த விருதும் சமன் செய்ய முடியாது. அதனால் விருதுகள் தான் ஃபீல் பண்ண வேண்டும். என் குடும்பமோ, தந்தையோ அல்ல என்று பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

ரஹ்மான்

பாலகிருஷ்ணா கூறியதை கேட்ட ரஹ்மானின் ரசிகர்களும், இசை பிரியர்களும் கோபம் அடைந்துவிட்டனர். உலகம் முழுவதும் பிரபலமான ரஹ்மானை உங்களுக்கு தெரியாதா என்று இசை ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கே பாலகிருஷ்ணா பேசியது பிடிக்கவில்லை. இந்நிலையில் #whoisbalakrishna என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

Twitter-ᎪΝᏆᎡႮᎠᎻ Fʀᴇᴀᴋ🐐

விளாசல்

தன் ரசிகர்களையே அறைபவர், பாரத ரத்னா விருதை பற்றி தரக்குறைவாக பேசுபவர், எப்பொழுது பார்த்தாலும் குடும்ப பெருமை பாடுபவர், டோலிவுட்டில் அதிக தோல்வி படங்கள் கொடுத்தவர், ஹீரோ என்கிற பெயரில் இருக்கும் காமெடியன் என்று சமூக வலைதளவாசிகள் பாலகிருஷ்ணாவை விளாசுகிறார்கள். இதை பார்த்த பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் அவரின் பெருமைகளை பட்டியலிட்டு #LegendaryNandamuriBalakrishna என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள்.

Twitter-𝐒𝐚𝐦 𝐉𝐨𝐡𝐧𝐕𝐢𝐤™