ஐபிஎல் 2022 தொடரில் ஏலம் எடுத்த பிறகு இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் விலகினர். பயோ பபுள், என்ற கொரோனா பாதுகாப்பு வலையத்தைக் காரணம் காட்டி விலகினர். இதனையடுத்து சில அணி உரிமையாளர்கள் வீரர்கள் திடீர் திடீரென விலகுவது குறித்த கவலைகளை எழுப்ப பிசிசிஐ தற்போது அதைத்தடுக்க புதிய விதிமுறைகளை ஏற்படுத்தி கெடுபிடிகளை அதிகரிக்கவுள்ளது.
