சென்னை: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கியதுமே, அதைப்பற்றிய மீம்ஸ்கள் பரவுவதும் தொடங்கிவிட்டன.
கோடை என்றாலே வெயில் சும்மா சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திரம் வேறு தொடங்கிவிட்டால் கேட்கவா வேண்டும்.
அனல்காற்றுடன் சேர்ந்து வெயிலும் கொளுத்துவதால் பகல் நேரத்தில் சாலையில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
அப்படி வெயிலில் செல்வோர் சற்று இளைப்பாற சாலையோரம் நின்று ஜூஸ் குடிக்கும் நேரத்தில் மொபைலை எடுத்து பார்க்கும் போது புன்முறுவல் செய்ய வைக்கும் மீம்ஸ்கள் பல இணையத்தில் பரவி வருகின்றன. அட்வைஸ் உடன் சிரிக்கவும் வைக்கும் மீம்ஸ்களின்தொகுப்பு உங்களுக்காக.