தமிழ் சினிமாவில் தன்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலந இயக்கத்தில் தற்போது `ஜெயில்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜிவி பிரகாஷ் குமார். இந்தப்படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அபர்ணாநதி அவர் ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் இந்தப்படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன், அதிகாரத்தின் பெயரால் சக மனிதர்களுடைய பூர்வீக வாழிடம் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பேசும் படமாக ஜெயில் உருவாகியிருக்கிறது. எப்போது நீங்கள் குரல் உயர்த்திப் பேசுகிறீர்களோ, அப்போது உங்கள் முன்னால் ஒரு ஜெயில் வந்து நின்றுவிடும். ஜெயில் என்ற தலைப்பு. இந்த படத்தில் ஒரு படிமமாக, ஒரு அடையாள குறியீடாக முன்னிறுத்தப்பட்டிருக்கிறது.

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட்: உற்சாகத்தில் சிம்பு ரசிகர்கள்!
மானுட வளர்ச்சிக்கும், மானுட சமூகத்தின் நலனுக்கும் எவையெல்லாம் இடையூறு ஏற்படுத்துகிறதோ, அவை அனைத்தும் ‘ஜெயில்’ தான். இந்தப்படத்தில் ‘இசை அசுரன்’ என ரசிகர்களால் போற்றப்படும் ஜிவி. பிரகாஷ் குமார், கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல் தான் கர்ணன். நம்முடைய புராணங்களிலுள்ள கர்ணன், வாழ்நாள் முழுவதும் அங்கீகாரத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன் தான், அந்த பண்பு நலன் இந்தப்படத்தில் ஜிவிக்கும் பொருந்தும்.

மேலும், ‘ஜெயில்’ படத்தில் நடிகர் தனுஷ், நடிகை அதிதி ராவ் குரலில் இடம்பெற்ற ‘காத்தோடு காத்தானேன்’ எனத் தொடங்கும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி, 21 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ‘ஜெயில்’ படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாருக்கும் ஹாய்; சாரா அலிகானின் வைரல் வீடியோ!