ஹைலைட்ஸ்:

  • பா. ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக
  • சார்பட்டா பரம்பரையில் உண்மைக்கு புறம்பான காட்சிகள்- அதிமுக

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்த சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில் படம் தொடர்பாக பா. ரஞ்சித்துக்கு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர்.

வரலாற்று படம் என்று தெரிவித்துவிட்டு உண்மைக்கு புறம்பான செய்திகள் மக்களிடையே பரப்பப்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை படத்தில் இருக்கும் காட்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பதை பார்த்த சினிமா ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ஏதாவது குறிப்பிட்ட காட்சி அவர்களுக்கு பிரச்சனையா?. அப்படியே இருந்தாலும் படம் ரிலீஸாகி இத்தனை நாட்கள் கழித்து நோட்டீஸ் அனுப்புவது ஏன்?. அவர்கள் நோட்டீஸ் அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால் என்னவென்று தெரிவித்துள்ளனர்.

Nayanthara: இவ்ளோ நாள் இருந்துட்டு இப்போ போய் கைவிட்டுட்டீங்களா விக்னேஷ் சிவன்?