நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், கார்ப்பரேட்களின் பிடியில் இந்திய விவசாயம் சிக்கிக் கொள்ளும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் ஒன்று சேர்ந்து பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.

பல்வேறு அடக்கு முறைகளையும் மீறி விவசாய பெருமக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். முன்னதாக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துல நடிச்சதுக்கு ஒரே காரணம் இதான் – கயல் ஆனந்தி!
இந்நிலையில் இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என பதிவிட்டுள்ளார்.

“விநோதய சித்தம்” நாடகம் – உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு!