ஹைலைட்ஸ்:

  • ஓடிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வடிவேலு
  • 10 ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடும் வடிவேலு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலுவுக்கு இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் மூலம் இடியாப்ப சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கலை தீர்த்து வைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்மையில் ஈடுபட்டு தோல்வி அடைந்தார்.

அப்படி என்றால் இனி வடிவேலுவை படங்களில் பார்க்கவே முடியாதா என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதற்கிடையே அவர் வெப்தொடர் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில் பிரபல தெலுங்கு ஓடிடிதளமான ஆஹா தமிழ் பக்கம் விரைவில் வரவிருக்கிறது. பல்வேறு சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை தமிழ் திரையுலக பிரபலங்களை தொகுத்து வழங்க வைத்து ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஆஹா ஈடுபட்டுள்ளது.

நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க ஆள் தேடியபோது தான் வடிவேலுவை விட்டால் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். நானும் எத்தனை காலம் தான் வீட்டில் சும்மாவே இருப்பது என்று ஆஹா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வடிவேலு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

இது குறித்து அறிந்த ரசிகர்களோ, ஆஹா நம்ம தலைவன் வரப் போறான்யா, திரும்பி வரப் போறான்யா என்று சந்தோஷமாக இருக்கிறார்கள்.

வடிவேலு கடந்த 10 ஆண்டுகளாக சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் மீம்ஸுகள் மூலம் நம்மை எல்லாம் தினம் தினம் சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay: நடிகர் விஜய்யை பாடாய்படுத்தும் 3 பேர்