ஹைலைட்ஸ்:

  • திலீப் குமாருக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்த பார்த்திபன்
  • பார்த்திபனை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 98. திலீப் குமார் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

திலீப் குமார் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்தார்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் திலீப் குமார் பற்றி போட்ட ட்வீட் சமூக வலைதளவாசிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.

பார்த்திபன் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர். இந்நிலையில் திலீப் குமாரின் பெயரை சற்று மாற்றி diRIP kumar என்று ட்வீட் செய்தார்.

Parthiban

அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

உங்கள் எதுகை மோனையில தீய வைக்க. இதற்கு பெயர் கிரியேட்டிவிட்டி கிடையாது ப்ரோ. ஒருவர் இறந்தபோது இப்படி எல்லாம் செய்யக் கூடாது.
உங்களின் கற்பனை திறனை பார்த்து வியக்கிறோம். ஆனால் இரங்கல் ட்வீட்டில் இப்படி செய்வது மிகவும் தவறு சார்.

திலீப் குமாரை கிண்டல் செய்வது போன்று உள்ளது உங்களின் ட்வீட். தயவு செய்து இந்த ட்வீட்டை நீக்கிவிடுங்கள். நீங்கள் என்ன பார்த்திபனா இல்லை Barத்திபனா என்று தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன் இரங்கல் தெரிவித்து போட்ட ஒரு ட்வீட்டால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. பார்த்திபனின் அந்த ட்வீட்டை நீக்குவது எப்படி என்று கூட சிலர் கூகுளில் தேடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya கண்ணு படப் போகுது: ஜோதிகாவிடம் சொல்லி சுத்திப் போடச் சொல்லுங்க சூர்யா