தமிழ் திரையுலகில் காமெடி கதாநாயகனாக கலக்கி வந்தவர் சந்தானம். முன்னணி கதாநாயகர்களை பலரை சகட்டுமேனிக்கு கலாய்த்து வந்த இவர் தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கும் டிக்கிலோனா படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தானம் கடைசியாக வெளியான பாரீஸ் ஜெயராஜ் படம் சூப்பர் ஹிட்ட்டித்தது. A1 படத்தை இயக்கியிருந்த ஜான்சன் கே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஏற்கனவே சந்தானம் நடித்து முடித்துள்ள சர்வர் சுந்தரம், டிக்கிலோனா போன்ற படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிக்கிலோனா படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

தனுஷ் – மித்ரன் ஜவஹர் இணையும் படத்தின் தலைப்பு ‘திருச்சிற்றம்பலம்’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் இந்தப்படத்தில் நடித்துள்ளார். டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. 2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதை போல் ‘டிக்கிலோனா’ படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இதனால் டிக்கிலோனா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.