ஹைலைட்ஸ்:

  • விஜே ஆனந்த கண்ணன் மரணம்
  • ஆனந்த கண்ணன் குறித்து ட்வீட் செய்த வெங்கட் பிரபு

சிங்கப்பூரில் இருந்து வந்து தமிழக மக்களின் மனம் கவர்ந்தவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகருமான விஜே ஆனந்த கண்ணன். அவர் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனந்த கண்ணன் நடித்த இரண்டு படங்கள் இதுவரை வெளியாகாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று உயிரிழந்தார். அவரின் மரணம் குறித்து அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனந்த கண்ணனின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது,
சிறந்த நண்பர், நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனது ஆழ்ந்த அனுதாபங்கள்#RIPanandakannan என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வினோ, ஓமைகாட், எப்படி என்று கேட்டிருக்கிறார்.
ஆனந்த கண்ணனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். போகும் வயதா இது, ஏன் கடவுளே இப்படி?. ஆனந்த கண்ணனின் சிரித்த முகம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விடிந்தும், விடியாமலும் இப்படி ஒரு செய்தியா என 90ஸ் கிட்ஸ் ஒரு பக்கம் வேதனை அடைந்துள்ளனர். காலையில் எழுந்து ட்விட்டருக்கு வருவோர் வெங்கட் பிரபுவின் ட்வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உடம்பில் ஏகப்பட்ட தையல்: மருத்துவமனையில் இருந்து யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ