சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டிய அட்லியை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்துள்ளனர்.

சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பிரபலங்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் இயக்குநர் அட்லியும் சார்பட்டா பரம்பரையை பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் செய்தார்.

ஆர்யா

சார்பட்டா பரம்பரை அருமையான படம். மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்திற்காக ஆர்யாவின் கடும் உழைப்பை அருகில் இருந்து பார்த்தவன். பாக்ஸிங் காட்சிகளாகட்டும், மன்னிப்பு கேட்டு தன் அம்மாவின் காலில் விழுவதாகட்டும், எதிராளியிடம் சவால் விடும்போதாகட்டும், ஆர்யா கபிலனாகவே வாழ்ந்திருக்கிறார். என் நண்பன் ஆர்யாவின் கெரியரில் சார்பட்டா பரம்பரை படம் ஒரு மைல்கல் என்று பாராட்டியிருக்கிறார் அட்லி.

Twitter-atlee

ரஞ்சித்

கிளாசிக் படத்தை கொடுத்த ரஞ்சித்தை பாராட்டுகிறேன். சார்பட்டா பரம்பரை படம் என்றும் நினைவில் நிற்கும். சந்தோஷ் நாராயணனின் இசை அருமை. ஆர்யா, மனைவி, அம்மா, ரங்கன் வாத்தியார், டாடி, வேம்புலி, காளி வெங்கட், கலையரசன், மாஞ்சா கண்ணன், தங்கதுரை ஆகிய கதாபாத்திரங்கள் என் இதயத்தில் பதிந்துவிட்டன. குறிப்பாக டான்சிங் ரோஸ் தான் எனக்கு பிடித்த கதாபாத்திரம். இந்த கிளாசிக்கிற்காக வாழ்த்துக்கள் என்றார் அட்லி.

Twitter-atlee

கிண்டல்

அட்லியின் ட்வீட்டுகளை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை கிண்டல் செய்துள்ளனர். அடுத்த ஸ்போர்ட்ஸ் டிராமாவுக்கு கதை கிடைச்சிடுச்சு போல. ஒரிஜினல் கன்டென்ட பார்க்க சந்தோஷமாத் தான் இருக்கும். ரஞ்சித்தின் கதையை எடுத்து டச்சப் செய்து படம் எடுக்க வேண்டியது தான் பாக்கி என சமூக வலைதளவாசிகள் விமர்சித்துள்ளனர்.