ஹைலைட்ஸ்:

  • முழு நேர மக்கள் சேவை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு?
  • நடிப்புக்கு முழுக்கு போடப் போகும் உதயநிதி ஸ்டாலின்?
  • மாரி செல்வராஜ் படத்துடன் நடிப்புக்கு குட்பை ?

தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் பின்னர் ஹீரோவானார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.எல்.ஏ. ஆன பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார். தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஆர்டிகிள் 15 இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்கிறார்.

இது தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மக்கள் சேவை செய்து கொண்டு படங்களிலும் நடிக்க முடியும் என்று நினைத்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் படங்களில் நடித்துக் கொண்டே மக்கள் சேவை செய்வது கடினமாக இருக்கிறதாம்.

இந்த காரணத்தால் மாரி செல்வராஜ் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேரம் மக்கள் சேவை செய்வது என்று உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை தன் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். தற்போது கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் பட வேலையை துவங்குவாராம் உதயநிதி.

கர்ணன் எனும் வெற்றிப் படத்தை அடுத்து த்ருவ் விக்ரமை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். அந்த படத்தை அடுத்து மீண்டும் தனுஷை இயக்கவிருக்கிறார். தனுஷ், மாரி செல்வராஜ் மீண்டும் கூட்டணி சேரும் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு துவங்கவிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துவிட்டது. அவர் நடித்து வரும் ஆர்டிகிள் 15 ரீமேக் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித்தின் வலிமை படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்