ஹைலைட்ஸ்:

  • ரஜினியின் ஸ்டைலுக்கு பின்னால் இருக்கும் காரணம் சொன்ன மாளவிகா
  • விஜய்யுடன் சேர்ந்து ஆடியபோது 2 மாதம் கர்ப்பம்- மாளவிகா
  • ரஜினி சார் ரொம்ப தன்மையானவர்- மாளவிகா

சுந்தர் சி. இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத் தேடி படம் மூலம் நடிகையானவர் மாளவிகா. அதன் பிறகு மீண்டும் அஜித்துடன் சேர்ந்து ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார்.

ரோஜாவனம், வெற்றிக்கொடி கட்டு, சீனு, லவ்லி, பேரழகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சந்திரமுகி, திருட்டுப்பயலே, வியாபாரி, நான் அவன் இல்லை உள்ளிட்ட படங்களில் நடித்தார். சித்திரம் பேசுதடி படத்தில் அவர் வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலுக்கு ஆடியது பட்டிதொட்டி எல்லாம் ரீச்சானது.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த குருவி படத்தில் வந்த ‘டன்டானா டர்னா’ என்கிற பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருந்தார் மாளவிகா. சுமேஷ் மேனன் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

மாளவிகா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். தான் படங்களில் நடித்தபோது நடந்த சுவராஸ்யமான விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் அஜித், விஜய், ரஜினியுடன் சேர்ந்து நடித்தது குறித்து கூறியிருப்பதாவது,

malavika

சென்னையின் ரித்திக் ரோஷன் விஜய். அவரின் குருவி படத்தில் டான்ஸ் ஆடியபோது நான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அதனால் என்னால் சரியாக ஆட முடியாமல் போனது. நான் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன். அது தான் என் கடைசி படம்.

ரஜினி சாருடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது. ஒரு காட்சியில் நானும், அவரும் மட்டுமே வருவோம். அவரின் முகத்தை பார்த்தாலே வசனம் எல்லாம் மறந்துவிட்டது. தயவு செய்து என் முகத்தை பார்க்காதீர்கள். என்னை பார்த்தால் வசனம் பேச முடியவில்லை என்று அவரிடம் கூறினேன்.

அவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் எளிமையானவர் ரஜினி சார். ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, கண்ணாடி போடுவது பற்றி நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ, நான் அழகாக இல்லை, அதனால் ரசிகர்கள் தொடர்ந்து என் படங்களை பார்க்க வேண்டுமானால் நான் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்றார். நான் அசிங்கமாக இருக்கிறேன் என்று யாருமே சொல்ல மாட்டோம். ஆனால் அவர் சொன்னார். அவர் தன்மையானவர்.

உன்னைத் தேடி படத்தில் நடித்தபோது குஷ்புவை தவிர வேறு யாரையும் எனக்கு தெரியாது. அஜித், சுந்தர் சி.யை தெரியாது. இருந்தாலும் நடிக்க போனேன். டான்ஸ் ஆடுவது கஷ்டமாக இருந்தது. என்ன பண்ற என்று அஜித் கூறினார். எல்லோரும் திட்டினார்கள் என்றார்.
சென்னை திரும்பிய ‘அண்ணாத்த’ ரஜினி, ஆரத்தி எடுத்த லதா: வைரல் வீடியோ