சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் ஏகத்திற்கும் பிரபலமாகியிருக்கும் அவர் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர். இந்நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சியால் அவரை தேடி ஹீரோ வாய்ப்பு வந்திருக்கிறது.

முதல் பட வேலை துவங்குவதற்கு முன்பே நடிகரை தேடி அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் நடிகர் மீது புகார் எழுந்திருக்கிறது.

ஹீரோ சான்ஸ் கிடைத்த கையோடு மேனேஜர், உதவியாளர் என்று பலரை வேலைக்கு வைத்திருக்கிறாராம். யாராவது நடிகருக்கு போன் செய்தால் அவர் எடுத்து பேசுவது இல்லையாம்.

தம்பி இன்னும் வளரவே இல்லை, அதற்குள் இம்புட்டு சீன் போடுகிறாரே. ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது. உங்களை போன்று பல பேரை பார்த்திருக்கிறோம் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று உச்சம் தொட்ட அந்த ஹீரோ போன்று ஆகும் ஆசைப்படும் இந்த இளம் நடிகர் எடுத்த எடுப்பிலேயே பெயரை கெடுத்துக் கொண்டிருக்கிறார்.