ஹைலைட்ஸ்:

  • ரசிகர்களை கவர்ந்த பொய்க்கால் குதிரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
  • பொய்க்கால் குதிரை போஸ்டரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து, இரண்டாம் குத்து என்று அடல்ட் காமெடி படங்களை எடுத்தவர் சந்தோஷ் பி ஜெயகுமார். அதிலும் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த போஸ்டரை பார்த்துவிட்டு இயக்குநர் இமயம் பாரதிராஜா விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். அதை பார்த்த சந்தோஷ், பாரதிராஜாவை விளாசினார். பின்னர் மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. அதை பார்த்தவர்களோ, பிரபுதேவாவுக்கு என்ன ஆச்சு, ஏன் இந்த ஆள் படத்தில் போய் நடிக்கிறார் என்று விமர்சித்தார்கள்.

டான்ஸால் பெற்ற நல்ல பெயரை எல்லாம் ஒரு பிட்டு படத்தால் இழக்கப் போகிறார் பிரபுதேவா என்றார்கள் சினிமா ரசிகர்கள். இந்நிலையில் தான் சந்தோஷ் ஜெயகுமார், பிரபுதேவா கூட்டணி சேர்ந்திருக்கும் படத்திற்கு பொய்க்கால் குதிரை என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர்.
போஸ்டரை பார்த்தவர்கள் மிரண்டே போனார்கள். கவர்ச்சியை எதிர்பார்த்த இடத்தில் பிரபுதேவா மாற்றுத்திறனாளியாக ரத்த காயங்களுடன் சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டு நிற்கிறார்.

பிரபுதேவானாவே கால் வேலை தானே. அவருக்கு ஒரு கால் இல்லாமல் ப்ராஸ்தெடிக் கால் வைத்திருக்கிறார் ஜெயகுமார். அப்படி என்றால் இது பிட்டு படம் இல்லை ஏதோ தரமான சம்பவம் போன்று.

பிரபுதேவா தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவில்லை. தெரிந்து தான் சந்தோஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

பொய்க்கால் குதிரை படத்தில் நடிப்புக்கு பெயர் போன வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடப்பாவமே, கல்யாணம் முடிந்த மறுநாளே சினேகன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பமா!