ஹைலைட்ஸ்:

  • மாநாடு படக்குழுவுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்
  • ஒரு வழியாக ரிலீஸான மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் திட்டமிட்டபடி நவம்பர் 25ம் தேதி ரிலீஸாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்று இரவு ட்வீட் செய்தார்.

அதை பார்த்த சிம்பு ரசிகர்கள் நொந்து போனார்கள். அதன் பிறகு படம் கண்டிப்பாக ரிலீஸாகும் என்றார் சுரேஷ் காமாட்சி.

மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் பண பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. படத்திற்கு பைனான்ஸ் செய்தவர்களில் ஒருவரான உத்தம்சந்த் ஒப்புக் கொண்டபடி ரிலீஸுக்கு முன்பு எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் காமாட்சியிடம் கூறியிருக்கிறார்.

அவர் கேட்டதும் பணத்தை கொடுக்கும் நிலையில் சுரேஷ் காமாட்சி இல்லையாம். பணம் இல்லாத காரணத்தால் ரிலீஸை தள்ளிப் போட முடிவு செய்தார்.

இந்நிலையில் தான் பிரபல பைனான்சியரான மதுரை அன்புச் செழியன் மாநாடு தயாரிப்பாளருக்கு ரூ. 10 கோடி கொடுத்திருக்கிறார். கடைசி நேரத்தில் டீல் பேசி மாநாடு படத்தை கலைஞர் டிவி ரூ. 6 கோடிக்கு வாங்கிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் தலையீட்டால் கலைஞர் டிவி டீலிங் நடந்ததாம்.

மேலும் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ரூ. 3 கோடியும், சிம்புவின் பெற்றோர் ரூ. 3 கோடியும் கொடுத்திருக்கிறார்கள். மேலும் ஓடிடி நிறுவனத்திடம் மாநாடு படத்தை விற்றிருக்கிறார்கள். இப்படி இரவோடு இரவாக நடந்த காரியங்களால் தான் பணம் கிடைத்து இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது.

இதற்கிடையே கலைஞர் டிவி டீலிங்கில் உதயநிதி தலையிட்டது உதவி அல்ல அது அவர் குடும்பத்திற்கு செய்த உதவி என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.

வேற லெவல், சூப்பர் ஹிட், கொல மாஸ்: மாநாடு ட்விட்டர் விமர்சனம்