தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. த்ரிஷா ஹீரோயினாக நடித்த இந்த திரைப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு கொஞ்சம் கேப் விட்டிருந்தார். நடிகை ஷ்ரேயா தனது கணவருடன் காதல் ரொமான்ஸ் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடா என பல மொழிகளிலும் நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரேயா. இவர் 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘இஷ்டம் ‘என்ற திரைப்பபடத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஸ்ரேயா திரை வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் படு வேகத்தில் வைரலாகும்.

தனுஷை களமிறக்க போட்டி போடும் தெலுங்கு தயாரிப்பாளர்கள்: குவியும் வாய்ப்புகள்!
இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் படகில் செல்லும் போது எடுக்கப்பட்ட நெருக்கமான ரொமான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ரேயா. இந்த வீடியோவில் அவர் தனது கணவரிடம் ’நான் செய்யும் எந்த விஷயம் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும்’ என்று கேட்க அதற்கு அவரது கணவர், ‘உன்னுடைய போனில் அதிக ஸ்பேஸ் இல்லை என்று நீ கூறுவது தான்’ என்று பதிலளிக்க இருவரும் சிரிக்கின்றனர். இந்த வீடியோவுக்கு ஸ்ரேயா சரண் ’ஜஸ்ட் லைக் தட்’ என்ற கேப்ஷனை பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/CQ8TEiCFaGs/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CQ8TEiCFaGs/?utm_source=ig_embed&utm_campaign=loading
இந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாக பலரும் ஸ்ரேயாவை திட்டி வருகின்றனர். என்னதான் கணவர் என்றாலும் பொது இடத்தில் இப்படியா? என பலரும் விளாசி வருகின்றனர். நடிகை ஸ்ரேயா தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.