விவாகரத்து குறித்து அறிவித்த பிறகு மாற்றம் பற்றி இன்ஸ்டா ஸ்டோரியில் பேசியிருக்கிறார் சமந்தா.

சமந்தா

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் நாக சைதன்யாவும், தானும் பிரிவது என்று முடிவு செய்துவிட்டதாக அக்டோபர் 2ம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார் சமந்தா. நாக சைதன்யாவும், சமந்தாவும் பிரிவது துரதிர்ஷ்டவசமானது என்று மாமனார் நாகர்ஜுனா ட்விட்டரில் கூறினார். சமந்தா பிரிந்து சென்றாலும் என்றும் தங்களுக்கு பிரியமானவர் தான் என்றார் நாகர்ஜுனா.

மாற்றம்

பிரிவை அறிவித்த பிறகு சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாற்றம் பற்றி பேசியிருக்கிறார். இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா கூறியிருப்பதாவது, உலகை மாற்ற வேண்டும் என்றால் முதலில் நான் மாற வேண்டும். மதியம் வரை படுக்கையில் இருக்கக் கூடாது. கடினமாக உழைக்க வேண்டும் என்றார்.

ரூ. 200 கோடி

-200-

நாக சைதன்யா குடும்பத்தார் சமந்தாவுக்கு ரூ. 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் ஒரு பைசா கூட வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சமந்தா. நான் கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்தேன். தொடர்ந்து உழைப்பேன். எனக்கு யார் பணமும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் சமந்தா.

ரசிகர்கள்

நாக சைதன்யாவும், சமந்தாவும் இப்படி பிரிவார்கள் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து ஹைதராபாத்தில் இருப்பாரா இல்லை சென்னைக்கு வந்துவிடுவாரா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.