கடந்த பொங்கல் வெளியீடாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த இந்தி ரீமேக்கில் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரீமேக்கில் இருந்து சல்மான்கான் விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த மாஸ்டர் படம் ஒரு வழியாக கடந்த பொங்கலுக்கு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த்து.

கொரோனா காரணமாக பல மாதங்களாக முடங்கி போயிருந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு ‘மாஸ்டர்’ பட ரிலீஸ் வரப்பிரசாதமாக அமைந்தது. விஜய் ரசிகர்களும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியாகி 16 நாட்கள் கழித்து ஓடிடியிலும் வெளியானது மாஸ்டர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர் படம்.

வார்த்தையை விட மவுனமே நிறைய பேசவேண்டும்: இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் மவுனப்படம்!
இந்நிலையில் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் சல்மான்கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து இந்திக்கு ஏற்றவாறு கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்நிலையில் மாஸ்டர் பட கதை திருப்திகரமாக இல்லததால் இந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சல்மான்கான் தற்போது இந்தியில் தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரீமேக்கில் இருந்து சல்மான்கான் விலகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாஸ்டர் பட ரீமேக் திட்டமிட்டபடி துவங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.