ஹைலைட்ஸ்:

  • கனெக்ட் படத்தை தயாரிக்கும் நயன்தாரா
  • அஸ்வின் சரவணனை நம்பும் நயன்தாரா

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கனெக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டன. படத்தை தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் நயன்தாரா.

இந்நிலையில் படம் குறித்து அஸ்வின் சரவணன் கூறியதாவது,

நான் நயன்தாராவை வைத்து மாயா படம் எடுத்ததால் அதன் இரண்டாம் பாகம் வேண்டும் என்று பலர் கேட்டார்கள். ஆனால் இரண்டாம் பாகத்திற்கான கதை கிடைக்காமல் அதை செய்யக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

லாக்டவுன் நேரத்தில் கனெக்ட் ஸ்க்ரிப்ட்டை எழுதினேன். நயன்தாராவால் மட்டுமே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று தோன்றியது. உடனே அவரிடம் ஸ்க்ரிப்ட்டை சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. மேலும் நான் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார்.

வழக்கமாக ஸ்க்ரிப்ட்டை பற்றி பேசிவிட்டு தயாரிப்பாளர்களை தேடுவோம். ஆனால் இங்கு நயன்தாரா என் மீது நம்பிக்கை வைத்து தயாரிக்கிறார்.(தற்போது தலைப்பை மீண்டும் வாசிக்கவும்.)

லாக்டவுன் நேரத்தில் அனைவரும் பயத்தில், ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தார்கள். அதை ஸ்க்ரிப்ட்டில் கொண்டு வர நினைத்தேன். மழையால் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை. டிசம்பர் மாதம் சென்னையில் படப்பிடிப்பை துவங்குகிறோம். சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடக்கும் என்றார்.

சிம்பு இப்படி செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கல