ஹைலைட்ஸ்:

  • பாபநாசம் 2 படம் எடுக்கப்படவில்லை
  • பாபநாசம் 2 படமா?: ஜீத்து ஜோசப், கமல் தரப்பு மறுப்பு
  • விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கும் கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் உலக நாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் விக்ரம் படத்திற்கு முன்பாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்க முடிவு செய்துள்ளார் கமல் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியது.

லோகேஷ் கொஞ்சம் இருப்பா: கௌதமி இல்லாமல் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் கமல்?படப்பிடிப்பை ஒரே மாதத்தில் முடிக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டது. த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தில் கமல் ஜோடியாக கவுதமி நடித்தார். தற்போது உருவாகவிருக்கும் பாபநாசம் 2 படத்தில் கவுதமி இல்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பாபநாசம் 2 படம் குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது பாபநாசம் 2 படத்தை எடுப்பது தொடர்பாக கமலிடம் பேசவே இல்லை என்று ஜீத்து ஜோசப் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்கள் மட்டும் தான் கமல் கையில் இருக்கிறது. இது தவிர்த்து அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று கமலுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு படங்கள் தவிர்த்து பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் கமல் என்று அண்மையில் தகவல் வெளியானது.

இதற்கிடையே இந்தியன் 2 படம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. படப்பிடிப்பை மீண்டும் துவங்குவது குறித்து ஷங்கர், லைகா நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.