ஹைலைட்ஸ்:

  • அபிஷேக் ராஜாவுக்கு ஓட்டு போடச் சொல்லும் இயக்குநர் சாம் ஆண்டன்
  • அபிஷேக்கின் விமர்சனத்தில் இருந்து தப்பிக்க விரும்பும் சாம் ஆண்டன்

பிக் பாஸ் 5 வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜாவை சீக்கிரமாக வெளியே விடுங்க, அவரிடம் கொஞ்சம் வேலை இருக்கு என்று கமல் ஹாசன் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதற்கு காரணம் அபிஷேக் பேசிய வீடியோ தான். தற்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் அபிஷேக் கூறியிருப்பதாவது,

ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா?. முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என்றார்.

எவ்ளோ மானங்கெட்டு திரிய வேண்டியிருக்கு: பிக் பாஸ் போட்டியாளரை பங்கம் செய்த நெட்டிசன்ஸ்அபிஷேக்கை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர். இந்நிலையில் அபிஷேக்கிற்கு ஓட்டு போடுமாறு இயக்குநர் சாம் ஆண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தயவு செய்து அனைவரும் அபிஷேக் ராஜாவுக்கு ஓட்டு போட்டு அவரை 100 நாட்கள் அங்கேயே வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்குள் நான் என் படத்தை ரிலீஸ் செய்துவிடுவேன். தம்பி ரிவ்யூ கிட்ட இருந்து தப்பிச்சிடலாம். சாரி நண்பா… எனக்கு வேற வழி தெரியல…இருப்பினும் குட் லக் மா என்றார்.

அபிஷேக் ராஜா படங்களை விமர்சிப்பார். அந்த விமர்சனத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறார் சாம் ஆண்டன்.