விக்ரம், விஜய் சேதுபதியை தான் எழுதும் கதையில் நடிக்க வைக்கப் போகிறார் கமல் ஹாசன் என்று கூறப்படுகிறது.

கமல் ஹாசன்

கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. விக்ரம் படத்தை அடுத்து மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். அந்த படத்திற்கு கமல் தான் கதை எழுதுகிறார்.

விக்ரம், விஜய் சேதுபதி

கமல் கதை எழுதி, மகேஷ் இயக்கும் படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். கமல், விக்ரம், விஜய் சேதுபதி ஆகியோர் சேர்ந்து நடித்தால் அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

படம்

மகேஷ் நாராயண் படத்தில் கமலுக்கு சிறு கதாபாத்திரம் தானாம். விக்ரம் மற்றும் விஜய் சேதுபதியை சுற்றி தான் கதை நகருமாம். அந்த படத்தில் வில்லன் விக்ரமா, விஜய் சேதுபதியா என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இரண்டு பேருமே வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்கள்.

கடாரம் கொண்டான்

விக்ரம் முன்னதாக கமல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். ராஜேஷ் எம். செல்வா இயக்கிய அந்த படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா நடித்திருந்தார். இந்நிலையில் கமல் எழுதும் கதையில் நடிக்கவிருக்கிறார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.