ஹைலைட்ஸ்:

  • ராம் சரணுக்கு வில்லனாகும் ஃபஹத் ஃபாசில்?
  • ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ஃபஹத் ஃபாசில்?

பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசிலுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம் என்றால் அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. படு பயங்கரமாக நடிக்கிறார். இதனாலேயே அவரைத் தேடி நெகட்டிவ் கதாபாத்திரங்களாக வருகிறது.

இந்நிலையில் ராம் சரணை வைத்து தான் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்குமாறு ஃபஹத் ஃபாசிலிடம் கேட்டிருக்கிறாராம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர். தான் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படத்திற்கு ஃபஹத் தான் சரியான வில்லனாக இருப்பார் என்று ஷங்கர் நம்புகிறாராம்.

ஷங்கர் கேட்டு முடியாது என்று சொல்ல முடியுமா, அதனால் ராம் சரணுடன் மோதிப் பார்ப்பது என்று ஃபஹத் முடிவு செய்துவிட்டாராம்.

அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் புஷ்பா படத்தில் அவருக்கு வில்லனே ஃபஹத் தான். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பின் முதல் நாள் அன்று கமலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ஃபஹத். கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார்.

விக்ரம் படத்தில் ஃபஹத் மட்டும் அல்ல விஜய் சேதுபதி என்கிற மொரட்டு வில்லனும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பலியான தோழி பவானியின் வீடியோவை வெளியிட்ட யாஷிகா