கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து நடிகை கரீனா கபூர் கான் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கரீனா கபூர்

பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரபல நடிகர் சயிஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைமூர் அலி கான், ஜஹாங்கிர் அலி கான் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டாவது மகன் ஜஹாங்கிர் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி பிறந்தார். இந்நிலையில் கர்ப்பம் குறித்து புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கரீனா.

செக்ஸ்

கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் எண்ணம் இருக்காது என்று கரீனா தன் புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது, இது குறித்து பேச தைரியம் வேண்டும் என்று இல்லை. இதெல்லாம் சாதாரண விஷயம். கணவன், மனைவி இடையே செக்ஸ் என்பது முக்கியமான விஷயம். கர்ப்ப காலத்தில் செக்ஸ் வைத்துக் கொள்ளும் எண்ணம் பெண்களுக்கு ஏற்படாமல் இருப்பது சாத்தியமே என்கிறார்.

நடிகைகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு செக்ஸ் மீது ஆர்வம் இருக்காது. முன்னணி நடிகைகள் இது குறித்து பேசுவதை மக்கள் அடிக்கடி பார்ப்பது இல்லை. அதே சமயம் முன்னணி நடிகைகள் கர்ப்பமாவதை பார்ப்பதும் மக்களுக்கு பழக்கம் இல்லை என்று கரீனா கபூர் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள்

சயிஃப் அலி கான் இன்று தன் 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே பிறந்தநாளை கொண்டாட சயிஃப் தன் மனைவி கரீனா, மகன்களுடன் மாலத்தீவுகளுக்கு சென்றிருக்கிறார்.