Memes
oi-Jaya Chitra
சென்னை: சினிமா பட பாணியில் ஆந்திராவில் கோவிலைத் துளையிட்டு திருட முயற்சித்த போது, துளையில் திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் பற்றி நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

சுந்தர்.சி இயக்கத்தில் விமலும், சிவாவும் நாயகர்களாக நடித்த கலகலப்பு படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி ஒன்றில், வீடொன்றில் உள்ள சிறிய துளை வழியாக சென்று நாயகன் திருடுவார். பின்னர் அதே மாதிரி போலீஸ் அதிகாரி ஒருவர் செல்ல முற்படும் போது, இடையிலேயே மாட்டிக் கொள்வார். ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட இந்தக் காட்சியை நிஜத்தில் செய்ய நினைத்து, வசமாக போலீசில் சிக்கியுள்ளார் ஆந்திராவில் திருடன் ஒருவர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள ஜடுபுடி கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது. கோவில் ஒன்றில் துளையிட்டு திருட முற்பட்ட போது, துளைக்குள் வசமாக மாட்டிக் கொண்டார். பின்னர் அவரைப் பிடித்து போலீசில் ஊர்மக்கள் ஒப்படைத்தனர்.

திருடன் துளைக்குள் மாட்டிக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இப்படி லட்டு மாதிரி கன்டெண்ட் கிடைத்தால் விடுவார்களா மீமர்கள். உடனே இந்தப் புகைப்படத்தை வைத்து மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர்.
இதோ அவற்றில் சில உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on Andhra theif factor.Those are some jolly memes assortment on Andhra theif factor.மீம்ஸ், திருடன் மீம்ஸ், வைரல் மீம்ஸ், தமிழ் மீம்ஸ்
Tale first revealed: Thursday, April 7, 2022, 19:55 [IST]