நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதனையடுத்து அவருக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கமல்ஹாசன்.

கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனப் பதிவிட்டு இருந்தார்.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் கொரோனா சிகிச்சையில் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும், அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அறிவித்து இருந்தது.

தளபதி 67 படத்தின் இயக்குனர் இவரா..?: எதிர்பார்ப்பை கிளப்பும் தகவல்!
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா, நடிகர் கமல்ஹாசன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதில், நலமாக வரவேண்டும் சகோதரரே. கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம் என குறிப்பிட்டுள்ளார்.

‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!