ஹைலைட்ஸ்:

  • திருமணத்திற்கு பிறகும் நடிக்கப் போகும் நயன்தாரா
  • கெரியர் விஷயத்தில் நயன்தாரா அதிரடி

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த விஷயம் நயன்தாரா அண்மையில் சொல்லித் தான் தெரியும்.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். ஆனால் பிற நிறுவனங்களின் படங்களில் நடிக்க மாட்டாராம். தன் கையில் இருக்கும் படங்களை முடித்த பிறகு தன் தயாரிப்பு நிறுவன படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார் நயன்தாரா என தகவல் வெளியாகியிருக்கிறது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து நயன்தாரா நடித்திருக்கும் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இது தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருக்கிறார்.

அட்லி இயக்கி வரும் பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அட்லி படத்தின் ஷூட்டிங் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

நிச்சயதார்த்தத்தை அடுத்து திருமண வீடியோவை வெளியிட்ட அமலா பால்