ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சார்பட்டா பரம்பரை

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா பாக்ஸராக நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யாவின் கெரியரிலேயே இது தான் சிறந்த பெர்ஃபாமன்ஸ் என்றும், ரஞ்சித்தின் சிறந்த படைப்பு என்றும் சயீஷாவின் அம்மா ஷாஹீன் ட்வீட் செய்துள்ளார்.

Twitter-Shaheen

மாரி செல்வராஜ்

சார்பட்டா பரம்பரையை பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியிருப்பதாவது, சார்பட்டா பரம்பரை பார்த்தேன். ரோசமான மக்களின் ரோசமான வாழ்வியலை ஆக்ரோசமான கலையாக்கி பெரும் கலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார் அண்ணண் @beemji. அத்தனை உழைப்பு அத்தனை வியப்பு வாழ்த்துக்கள் அண்ணா. சாத்தியபடுத்திய மொத்த படக்குழுவிற்கும் ப்ரியமும் அன்பும் என்று தெரிவித்துள்ளார்.

Twitter-Mari Selvaraj

பிரமாதம்

வேம்புலி கூட மோதி கபிலன் ஜெயிக்கிறது தான் கதைன்னு படம் ஆரம்பிச்ச 20 நிமிஷத்துலயே தெரிஞ்சாலும், மூனு மணி நேரம் படத்த பாக்க வெச்ச ரஞ்சித்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் பிரமாதம். #சார்பட்டாபரம்பரை என்று சினிமா ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Twitter-Prakash PN

உடன்பிறப்பு

சார்பட்டா பரம்பரையின் பயிற்சியாளராக நடித்து அனைவரின் கைதட்டல்களையும் வாங்கியிருக்கிறார் பசுபதி. கழகத்தோட உடன்பிறப்பு நான், யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று அவர் பேசிய வசனம் வைரலாகிவிட்டது.

Twitter-⭐ கருப்பு மன்னன் ⭐️