ஹைலைட்ஸ்:

  • பிக்கப் டிராப் படத்தில் நடித்து வரும் வனிதா
  • மீண்டும் ஒரு பிக்கப் டிராப் போட்டோவை வெளியிட்ட வனிதா

கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார் வனிதா விஜயகுமார். அவ்வப்போது அவர் புதுப்படம் குறித்து அறிவிக்கும்போது அக்கா, லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுது என்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் கழுத்தில் புது தாலியுடன் செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஆனால் இம்முறை ஒரு வித்தியாசம். அதாவது பிக்கப் டிராப் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்பதை தெளிவாக கூறியுள்ளார் வனிதா.

இதில் என்ன குழப்பம் என்கிறீர்களா?. முன்னதாக பிக்கப் டிராப் படத்திற்காக பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை எதுவும் கூறாமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் வனிதா. அதை பார்த்தவர்களோ, பவர் ஸ்டார் தான் உங்களின் 4வது கணவரா என்று கேட்டார்கள்.

அமைதியாக இருந்த வனிதா பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்தார். ஆனால் இம்முறையோ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டதை தெளிவுபடுத்திவிட்டார்.

வனிதாவின் புகைப்படத்தை பார்த்த ஆதரவாளர்களோ, அக்கா நாளுக்கு நாள் அழகாகிக் கொண்டே இருக்கிறீர்கள், கண்ணு படப் போகுது, சுத்திப் போடுங்க என தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகளோ, மறுபடியும் முதலில் இருந்தா?. இன்னும் எத்தனை முறை திருமணம் செய்வீர்கள், உங்களுக்கு போர் அடிக்காதா என்று கிண்டலாக கேட்டிருக்கிறார்கள்.

ஆண்டவர் வீட்டில் விசேஷம்: ஒன்று கூடிய குடும்பம், வருத்தத்தில் ஸ்ருதி ஹாசன்