ஹைலைட்ஸ்:

  • மாநாடு படத்தை கொண்டாடும் ரசிகர்கள்
  • மாநாடு படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்த மாநாடு படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகிவிட்டது. ரிலீஸில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு, படக்குழு இரவெல்லாம் தூங்கவில்லையாம்.

கடைசி நேரத்தில் மாநாடு ரிலீஸில் சிக்கல்: திடீர்னு வந்த உதயநிதி, விடிய விடிய நடந்தது என்ன?கடைசி நேரத்தில் ஏற்பட்ட பண பிரச்சனையை இரவோடு இரவாக தீர்த்திருக்கிறார்கள். எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனை கொடுக்கிறாங்க என்று கூறி மாநாடு பட விழா மேடையில் சிம்பு அழுதார்.

இந்நிலையில் அவரின் கண்ணீர், கடைசி நேர டென்ஷனுக்கு எல்லாம் சிறப்பான பரிசு கிடைத்திருக்கிறது. அதாவது மாநாடு படத்தை பார்த்த அனைவருக்கும் அது பிடித்திருக்கிறது.

ரிப்பீட்டு என்று ஒரே வார்த்தையில் பலரும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். தியேட்டருக்கு போறோம், படம் பார்க்கிறோம், ரிப்பீட்டு என்று பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

மாநாடு படம் சிம்புவின் கெரியரில் திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இப்படி ஒரு விமர்சனம் எழுந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் மாநாடு பற்றி அனைவரும் நல்லவிதமாக பேசிக் கொள்வதை பார்த்து சிம்பு ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

சிம்பு மற்றும் படக்குழு பட்ட கஷ்டமெல்லாம் வீண் போகவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.