ஹைலைட்ஸ்:

  • ப்ரியா பவானி சங்கரிடம் காதலை சொன்ன ரசிகர்.
  • இதயம் முரளி மாதிரி இருக்க வேண்டாம் என்று அட்வைஸ்.
  • தன்னுடைய நாளை அழகாக்கியதற்கு நன்றி சொன்ன ரசிகர்.

கைவசம் நிறைய படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ப்ரியா, அரசியல் சார்ந்த பதிவுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். இந்நிலையில் இணையத்தில் தனக்கு புரோபோஸ் செய்த ரசிகர் ஒருவருக்கு க்யூட்டான ரிப்ளே கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இணையத்தில் தனக்கு வரும் எதிர்மறை கமெண்ட்களுக்கு யோசிக்காமல் பதிலடி கொடுத்து வரும் ப்ரியா பவானி சங்கர், ஒருசில ரசிகர்களின் குறும்பு கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர், மேயாத மான் படம் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 5 செகண்டுகளுக்கு ஒரு தடவை ப்ரியா பவானி சங்கர் மீது காதலில் விழுவதாக, கையில் மைக்குடன், மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள பிரியா பவானிசங்கர், அந்த ரசிகரின் பதிவிற்கு ஹார்ட்டின் விட்டு நீங்கள் என்னை டேக் செய்து காதலை சொல்ல வேண்டும். இதயம் முரளி போன்று இருக்க வேண்டாம்.. உங்களின் அன்புக்கு நன்றி என க்யூட்டாக பதிலளித்துள்ளார். அதனை பார்த்த அந்த ரசிகர், ரிப்ளை செய்ததற்கு நன்றி நீங்கள் என் நாளை சிறந்ததாக்கி விட்டீர்கள். லவ் யூ சோ மச் என பதிவிட்டு அவர் பங்கிற்கு நாலு ஹார்ட்டின்களையும் ப்ரியா பவானி சங்கருக்கு ஷேர் செய்துள்ளார்.

சென்னை திரும்பியதும் ரஜினி செய்த முதல் வேலை: தலைவரே சொல்லிட்டாரு இனி பயமில்லை!
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ப்ரியா பவானி சங்கர் போட்ட பதிவிற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தது. அது அனைத்திற்கும் தயங்காமல் பதிலடி கொடுத்து வந்தார் ப்ரியா பவானி சங்கர். சில தினங்களுக்கு முன்பு தனது தாத்தா மறைவிற்காக அவர் பகிர்ந்த பதிவு காண்போரை நெகிழ செய்தது.

ப்ரியா பவானி சங்கர் தற்போது பொம்மை, ஹரி இயக்கத்தில் அருண்விஜய்யுடன் ஒரு படம், இந்தியன் 2 , சிம்பு கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலை வெளிப்படுத்திய ரசிகருக்கு, கோபப்படாமல் க்யூட்டாக, ப்ரியா பவானி சங்கர் பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.