கவுதம் மேனன் படத்தில் நடிப்பதற்காக சிம்பு தன் உடல் எடையை 15 கிலோ குறைத்திருக்கிறார்.

வெந்து தணிந்தது காடு

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்தனர். இந்நிலையில் அந்த தலைப்பை நீக்கிவிட்டு வெந்து தணிந்தது காடு என்று தலைப்பு வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். போஸ்டரில் அழுக்கு படிந்த லுங்கி, சட்டையில் சிம்புவை ஒல்லியாக பார்த்த அனைவரும் அசந்து போனார்கள்.

சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஐசரி கணேஷ் கூறியதாவது, இது ஒரு ஆக்ஷன் டிராமா படம். எஸ்.டி.ஆரின் கதாபாத்திரம் பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் அவர் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் இது. அந்த கதாபாத்திரத்திற்காக தன் உடல் எடையை சுமார் 15 கிலோ குறைத்துவிட்டார். தற்போது மிகவும் இளமையாக தெரிகிறார் என்றார்.

பயிற்சி

இந்த லுக்கிற்காக எஸ்.டி.ஆர். கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தார். படத்தில் அவர் நிறைய ஸ்ட்ண்ட் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். கதையை ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அந்த கதையுடன் கவுதம் என்னை அணுகினார். எனக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. திருச்செந்தூரில் படப்பிடிப்பை துவங்கினோம். இதையடுத்து சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்கும். என ஐசரி கணேஷ் தெரிவித்தார்.

படப்பிடிப்பு

நதிகளிலே நீராடும் சூரியன் என்பது காக்க காக்க படத்தில் வரும் பாடல் வரி. ஸ்க்ரிப்ட்டுக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று முதலில் நினைத்தோம். ஆனால் பாரதியாரின் கவிதையில் வரும் வெந்து தணிந்தது காடு தான் கச்சிதமாக இருக்கும் என்று பின்னர் தோன்றியது என்றார் ஐசரி கணேஷ். ராதிகா சரத்குமார் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார். பிற நடிகர்கள், நடிகைகளின் விபரம் விரைவில் வெளியிடப்படுமாம்.