கழுத்தில் தாலி ஏறினால் மார்க்கெட் போய்விடும் என்று தென்னிந்திய நடிகைகள் பயப்படுகிறார்கள். அப்படி இருக்கும் போது தன் காதலரை திருமணம் செய்து கொண்ட பிறகும் சந்தோஷமாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார் அந்த நடிகை.

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார். தற்போது அம்மணியின் மார்க்கெட் அடி வாங்கத் துவங்கியிருக்கிறது. அதற்கு காரணம் அவரே தானாம்.

தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம் ஹீரோவுக்கு கொடுக்கும் அதே சம்பளம் எனக்கும் வேண்டும் என்கிறாராம். அது எப்படி மேடம் முடியும் என்று கேட்டால், நான் சொன்னால் சொன்னது தான் என்கிறாராம்.

அவ்வளவு பெரிய தொகையை உங்களுக்கு கொடுக்க முடியாது என்று கதை சொல்ல வருபவர்கள் நடையை கட்டுகிறார்களாம். இதற்கிடைய பிற நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.

நடிகையின் செயல்கள் சக நடிகைகளுக்கு மட்டும் அல்ல இயக்குநர்களுக்கும் பிடிக்கவில்லையாம்.