ஹைலைட்ஸ்:

  • ரசிகர்களுக்கு பதில் அளித்த ராஷி கன்னா
  • காதலர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஷி கன்னா

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் ராஷி கன்னா. தற்போது தமிழ் திரையுலகின் பிசியான ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். சுந்தர் சி. இயக்கத்தில் ஆர்யாவுடன் சேர்ந்து ராஷி கன்னா நடித்திருக்கும் அரண்மனை 3 படம் அக்டோபர் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் ராஷி கன்னா.

கோலிவுட்டில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும், நடிகை நயன்தாரா என்றும் கூறினார் ராஷி கன்னா.

தெலுங்கு திரையுலகில் சமந்தாவும், அனுஷ்காவும் தான் தனக்கு பிடித்த நடிகைகள் என்றார். சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டியதுடன், அவர் நடனமாடும் விதத்தை பார்த்து வியப்பதாக கூறினார் ராஷி கன்னா.

அப்பொழுது ரசிகர் ஒருவரோ, உங்களின் காதலர் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு ராஷி கன்னா கூறியதாவது,

எனக்கு காதலர் யாரும் இல்லை. அப்படி யாராவது என் வாழ்வில் வந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் என்றார்.

இவ்வளவு அழகாக இருக்கும் ராஷி கன்னாவுக்கு காதலர் இல்லையாம் என்று ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கல்யாணம் நெருங்குது: திடீர்னு அதிரடி முடிவு எடுத்த நயன்தாரா

இளையராஜா இளையராஜா தான் – அனு மோகன் பெருமிதம்!