ஹைலைட்ஸ்:

  • நவம்பர் 21ம் தேதி கார்த்திகேயாவுக்கு திருமணம்
  • காதலி லோஹிதாவை மணக்கிறார் கார்த்திகேயா

அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. அவருக்கும், காதலி லோஹிதாவுக்கும் நவம்பர் 21ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் காதல் பற்றி கார்த்திகேயா கூறியதாவது,

2010ம் ஆண்டு என்.ஐ.டி. வாரங்கலில் முதல்முறையாக லோஹிதாவை சந்தித்தேன். 2012ம் ஆண்டு என் காதலை அவரிடம் சொன்னேன். ஓராண்டு கழித்து காதலை ஏற்றுக் கொண்டார். கல்லூரியில் படித்தபோது லோஹிதா எனக்கு அனுப்பிய மெசேஜால் எங்கள் வீட்டில் பெரிய சண்டை நடந்தது. ஆனால் அது பிராங்க் என்று கூறி தப்பித்துவிட்டேன்.

லோஹிதா தான் அந்த மெசேஜை அனுப்பினார் என்பதை என் பெற்றோர் கண்டுபிடித்துவிட்டனர். எனக்கும், லோஹிதாவுக்கும் இடையே இருக்கும் காதல் குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பு எங்கள் பெற்றோருக்கு தெரிய வந்தது. எங்களின் நட்பு மற்றும் காதலை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

நான் லோஹிதாவை பல ஆண்டுகளாக காதலித்தாலும் ஒரு முறை கூட ஐ லவ் யூ என்று சொன்னது இல்லை. ராஜா விக்ரமார்கா நிகழ்ச்சியில் தான் முதல் முறையாக ப்ரொபோஸ் செய்தேன் என்றார்.

பிகினியில் செக்ஸி டான்ஸ் ஆடிய பீஸ்ட் ஹீரோயின்: வைரல் வீடியோ