ஹைலைட்ஸ்:

  • அருண்ராஜா காமராஜுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு
  • சென்னையில் மருத்துவமனையில் இருக்கும் அருண்ராஜா காமராஜ்
  • அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனா பாதிப்பால் மரணம்

நடிகரும், இயக்குநரும், பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜின் காதல் மனைவி சிந்துஜா கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 38. மனைவியை இழந்து வாடும் அருண்ராஜாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லையே என திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் தெரிவித்துள்ளனர்.

கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்இந்நிலையில் தான் அருண்ராஜா காமராஜும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. அவரின் நிலைமை சீராக இருக்கிறதாம். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காதல் மனைவியை பறிகொடுத்துவிட்டு இப்படி கொரோனா வார்டில் இருக்கும் கொடுமை எந்த கணவனுக்கும் வரவே கூடாது. அருண்ராஜா அண்ணாவின் நிலைமையை நினைக்க நினைக்க கண்ணீர் வருகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து அதிர்ச்சி: ‘காலா’ ரஜினியின் மூத்த மகன் கொரோனாவால் மரணம்இன்று காலையில் இருந்து இதுவரை மட்டும் இரண்டு மரண செய்தி வந்திருக்கிறது. சிந்துஜாவின் மரண செய்தி வெளியான வேகத்தில் வெண்ணிலா கபடிகுழு படம் புகழ் நிதிஷ் வீரா கொரோனாவால் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.

அய்யோ கடவுளே, இது என்ன கொடுமை. இன்னும் எத்தனை கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கிறதோ. தயவு செய்து கொரோனா வைரஸை அழித்து மக்களை காப்பாற்றும் என்று சினிமா ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்த வரை உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 இந்தி படத்தை ரீமேக் செய்து வந்தார் அருண்ராஜா காமராஜ். அவருக்கு ஏற்பட்ட நிலையை பார்த்த ரசிகர்களோ, உதய்ணா உங்க பட இயக்குநரின் பரிதாப நிலையை பார்த்தீங்களாணா என தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்க அருண்ராஜா காமராஜுக்கு வாய்ப்பு கிடைத்ததை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டவர் அவரின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் தான்.

அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அறிமுகமான கனா படத்தை தயாரித்து மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.