பாலிவுட் பிரபலங்களான அக்ஷய் குமார், ஜான் ஆபிரகாம், ஸ்ரீதேவி, சயிஃப் அலி கான், ஹேமமாலினி ஆகியோர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டவர்கள்.

அக்ஷய் குமார்

பாலிவுட்டில் கை நிறைய படங்கள் வைத்திருக்கும் அக்ஷய் குமார் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மகளும், நடிகையுமான ட்விங்கிளை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2001ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு ஆரவ் என்கிற மகனும், நிதாரா என்கிற மகளும் இருக்கிறார்கள். அக்ஷயும், ட்விங்கிளும் சேர்ந்து கிலாடி, ஜுல்மி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜான் ஆபிரகாம்

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பிபாஷாவை பிரிந்த பிறகு ப்ரியா ருன்சல் மீது ஜான் ஆபிரகாமுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ப்ரியாவை அமெரிக்காவில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் தேதி அவர்களின் திருமணம் நடந்தது.

சயிஃப் அலி கான்

பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் தன்னை விட தன்னை விட 13 வயது பெரியவரான நடிகை அம்ரிதா சிங்கை காதலித்து கடந்த 1991ம் ஆண்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். வயது வித்தியாசத்தால் இந்த திருமணத்திற்கு சயிஃபின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தன் முதல் படமே ரிலீஸாகாத நிலையில் சயிஃப் அம்ரிதாவை மணந்தார். அவர்களுக்கு சாரா, இப்ராஹிம் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். சயிஃபும், அம்ரிதாவும் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு சயிஃப் அலி கான் நடிகை கரீனா கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஸ்ரீதேவி

பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான தயாரிப்பாளர் போனி கபூர் மீது காதல் ஏற்பட்டது. இதையடுத்து 1996ம் ஆண்டு அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஜான்வி தன் அம்மா வழியில் நடிகையாகிவிட்டார். குஷியும் விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்.

ஹேமமாலினி

பாலிவுட் கொண்டாடும் தம்பதியான தர்மேந்திராவும், ஹேமமாலினியும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டவர்கள் தான். ஏற்கனவே திருமணமாகி 2 பையன்களுக்கு தந்தையான தர்மேந்திரா, ஹேமமாலினியை மணக்க இஸ்லாத்திற்கு மாறினார். பின்னர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். தும் ஹசீன் மெய்ன் ஜவான் படத்தில் சேர்ந்து நடித்தபோது தர்மேந்திராவுக்கும், ஹேமமாலினுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்களுக்கு இஷா, அஹானா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.