ஹைலைட்ஸ்:

  • தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்
  • மித்ரன் ஜவஹர் படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா, ராஷி கன்னா

தனுஷை வைத்து குட்டி, யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர். இந்நிலையில் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். டி44 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் மூன்று ஹீரோயின்களாம்.

அடேங்கப்பா, மூன்று ஹீரோயின்களா என்று ரசிகர்கள் வியந்து கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு ஹீரோயின்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளது. ராஷி கன்னா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்களாம்.

dhanush

ராஷியும், ப்ரியா பவானி சங்கரும் தனுஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவமே முதல் முறை ஆகும். இருவருக்குமே வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

தனுஷ், மித்ரன் ஜவஹர் 4வது முறையாக கூட்டணி சேரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 5 ஆண்டுகள் கழித்து தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

இந்த படம் தவிர்த்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ராயன் படத்தில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ம் தேதி துவங்கவிருக்கிறது. தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் தனுஷ். அந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவிருக்கிறது. தனுஷின் பிறந்தநாள் அன்று அவரை வாழ்த்தி தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது. அதில் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
டிவிக்கு வரும் விஜய் சேதுபதி ‘மகள்’: சம்பளம் ரூ. 1 கோடிப்பு