கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி போதைப்பொருட்கள் வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெங்களூரு இந்திராநகரில் இருந்து வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றுள்ளார் சஞ்சனா. அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக டிரைவர் சூசை மணி ராஜராஜேசுவரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன்.

சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

பிரம்மாண்டமாக உருவாகும் பிரபாஸின் 25-வது படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!